அமிர்கான் மகளின் அசத்தல் படங்கள்!

ஒரு மாதம்கூட ஆகவில்லை. கடந்த நவம்பரில் அமிர்கான் மகள் அய்ரா டைரக்ட் செய்த நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தில் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் நடித்திருந்தார். பிரபல நடிகை ஹாஸெல் கீச் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த நாடகம் மீடியாக்களில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால், அந்த புகழ் வெளிச்சம் மங்குவதற்குள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார் அய்ரா. அவர் தனியே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் படங்கள் அவருடைய அழகை...
Read More

நான் ஒரு மொரட்டு சிங்கிள்! அடா ஷர்மா பளிச்

டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக் கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வால் நடிப்பில் உருவாகி வரும் கம்மாண்டோ-3 படத்தின் நாயகியாக இப்போது நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கலக்கி இருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதை ட்ரெய்லரிலேயே பார்க்க முடிந்தது. கமாண்டோ-3...
Read More

குடியுரிமைச் சட்ட நகலுக்கு பாகிஸ்தான் இந்துக்களும் எதிர்ப்பு!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், ஜெயின்கள் ஆகிய மதத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாகவும், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளை...
Read More

பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாக அமித் ஷா பொய் சொல்கிறார் – புள்ளிவிவரங்களுடன் பதில்!

பாகிஸ்தான் உருவானபோது 1947ல் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாகவும், இப்போது 3.7 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும் குடியுரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் பேசியதை பாகிஸ்தான் அரசு புள்ளிவிவரங்களுடன் மறுத்துள்ளது. 1947ல் அப்போதைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த தற்போதைய பாகிஸ்தானில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாக அமித் ஷா கூறுவது அப்பட்டமான பொய். 1961ல் எடுக்கப்பட்ட...
Read More

தமிழர்களுக்கு துரோகம் செய்யவே நாடாளுமன்றம் வந்த அன்புமணி! கனிமொழி கடும் தாக்கு

சென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில்,  சென்னையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமைகளைப் பறிக்க அதிமுக துணை போயிருக்கிறது. நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தமாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார்.

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார்- எந்த நாளில் என்னென்ன விசேஷம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat...
Read More