மோடியை தேசத்தந்தைனு ட்ரம்ப் சொன்னா உங்களுக்கு ஏன் காயுது? மத்திய அமைச்சர் கோபம்!

0
24

இதுவரை எந்த இந்திய பிரதமருக்கும் கிடைக்காத வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரே மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என்று சொல்லியிருக்கிறார். இதை ஏற்காத யாரும் இந்தியரே இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் இந்தியரில் ஒருபகுதியினர் பங்கேற்ற கூட்டத்தில் மோடியும் ட்ரம்ப்பும் கலந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமெரிக்காவில் வாழும் 30 லட்சம் இந்தியரின் வாக்குகளை குறிவைத்து குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பல்வேறு தந்திரங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் மோடியின் கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப், இந்தியாவின் தேசத்தந்தையாக மோடியை பார்ப்பதாக கூறினார்.

இதை காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியாவுக்கு காந்தி மட்டுமே தேசத்தந்தை என்றும், வன்முறையையும், வெறுப்பு அரசியலையும், ஜனநாயகப் படுகொலையையும் நடத்தும் மோடி எப்படி தேசத்தந்தை ஆகமுடியும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவில் மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு வெளியிலேயே அவருடைய ஆட்சியின் லட்சணங்களை எதிர்த்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில்தான் அமைச்சர் ஜிதேந்திரா சிங், ட்ரம்ப் கூறியதை ஏற்காதவர்கள் இந்தியர்களே அல்ல என்றும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

கொஞ்சம்கூட பொருத்தமில்லாத மோடிக்கு விருதா? பில்கேட்ஸ் நிறுவன பொறுப்பாளர் பதவி விலகல்!

தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் என்ற விருதை பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், மனித உரிமைகளை மீறி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் கொடூரமான தாக்குதல்களை கண்டுகொள்ளாத மோடிக்கு இந்த விருதை வழங்குவது தவறு என்று ஏராளமான அறிஞர்களும், பில்கேட்ஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையும் மீறி, அவருக்கு இந்தவிருது வழங்குவது உறுதி என்று பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவித்தது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன்பாக நிறுவனத்தின் தகவல் தொடர்பு ஸ்பெஷலிஸ்ட்டான ஷாபா ஹமித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காஷ்மீரில் தகவல் தொடர்புகளை 50 நாட்களாக துண்டித்திருக்கும் மோடிக்கு இந்த விருதை கொடுக்கக்கூடாது என்று நிர்வாத்திடம் கூறினேன். ஆனால், இந்த முடிவை மாற்ற முடியாது என்று கூறினார்கள்.  எனவே, காஷ்மீரி என்ற வகையில் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன் என்றார் ஷாபா ஹமித்.

மோடிக்கு இந்த விருது வழங்கப்படுவதை எதிர்த்து ஐரிஷ் நாட்டு நோபல் விருதாளர், ஈரான், ஏமன் நாடுகளைச் சேர்ந்த நோபல் விருதாளர்கள் கடிதம் எழுதினார்கள். பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருலட்சம் கையெழுத்துகளைப் பெற்று முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here