பாஜக முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியையே கைது செய்த போலீஸ்!

0
45

பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான சின்மயானந்தா மீது பாலியல் வன்கொடுமைப் புகார் கொடுத்த சட்ட மாணவியை, அவர் மீது பதியப்பட்ட பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் விசாரணைக்காக உத்தரப்பிரதேச போலீஸ் கைது செய்தது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு காவல்படை காலை 9 மணிக்கு கைதுசெய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. சாஜஹான்பூர் காவல் நிலையம் இவருடைய இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை ஏற்றுக்கொண்ட மறுநாள் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். நீதிமன்றம் ஜாமீன் கோரும் மனுவை ஏற்றிருந்தாலும், போலீஸார் மாணவியை கைதுசெய்வதை தடுக்க முடியவில்லை.

தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை பாலியல் உறவுக்கு சின்மயானந்தா அழைத்ததாக மட்டுமே மாணவி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அது வெளியான 1 மாதத்துக்கு பிறகு கடந்த வெள்ளியன்று அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், புகார் கொடுத்த பெண்ணையும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு இருக்கும்போதே போலீஸ் கைது செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here