கல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரி பள்ளங்களை குப்பைகளால் நிரப்பலாம்!

0
19

கல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் அளவுக்கு அதிகமான பள்ளமாக தோண்டப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், நகரங்களின் குப்பைகளை அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் மலைபோல் கொட்டுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில், கரிம்நகர் முன்னாள் மேயரான ரவிந்தெர் சிங் கிரானைட் குவாரிகளை குப்பைகளால் நிரப்பலாம் என்று யோசனையைத் தெரிவித்துள்ளார். குப்பைகளாலும், இதர கழிவுகளாலும் குவாரிகளை நிரப்பி, பின்னர் மண்ணைக் கொண்டு நிரப்பினால் மரக்கன்றுகளை நட முடியும். அப்படி நடும்போது, சுற்றுச்சூழலும் மேம்பட வாய்ப்பிருக்கிறது என்று அவர் அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here