ஹாலிவுட்டின் டாப் டென் ஹாட் நடிகைகள்!

0
33

டாப் டென் என்றால் நேரத்துக்கு நேரம் வேறுபடும். இன்று ஒரு நடிகைக்கு இருக்கும் மார்க்கெட் நாளை இருக்காது. ஆனால், ஆண் ரசிகர்கள் மத்தியில் இருக்கிற புகழை வைத்து ஹாட்டெஸ்ட் நடிகைகளை கணக்கிட முடியும்.

இதோ இந்த ஆண்டின் டாப் டென் ஹாட்டெஸ்ட் நடிகைகள்…

10. ஏஞ்சலினா ஜோலி

உலகின் மிக அழகான பெண்கள் லிஸ்ட் பலவற்றில் தொடர்ந்து இடம்பெறும் ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கர் விருதுபெற்ற நடிகையான இவர் இன்றும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் நபர்களில் இடம்பிடித்திருக்கிறார் என்பது பெரிய விஷயம்தான். உலக அளவில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுகிறார். 

9. எம்மா ஸ்டோன்

குழந்தை நட்சத்திரமாக அமெரிக்கர்களுக்கு அறிமுகமான இவர், நாடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் தோன்றியவர். 2007ல் சூப்பர்பேட் என்ற படத்தில்தான் முதலில் நடித்தார். இப்போது ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார்.

8. சார்லைஸ் தெரான்

இவர் ஹாட்டெஸ்ட் நடிகை மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகையும் கூட. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அழகியான இவர், உலகின் மிகச்சிறந்த கண்களுக்குச் சொந்தக்காரர். 1975ல் பிறந்த சார்லைஸ், மோன்ஸ்டெர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் தென்னாப்பிரிக்க நடிகை. தி டெவில்ஸ் அட்வகேட், தி இட்டாலியன் ஜாப், மைட்டி ஜோ யங் ஆகிய படங்கள் குறிப்பிடத் தகுந்தவை.

7. ஒலிவியா வொய்ல்ட்

நடிகையாகவும், மாடலாகவும் வலம் வரும் இவர் ஹாலிவுட்டின் ஹாட்டெஸ்ட் நடிகைகளில் முக்கியமானவர். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் வர்த்தகரீதியிலான சினிமாக்களிலும் நடித்தவர். ஆஸ்கர் வொய்ல்ட் என்ற கதாசிரியரின் பெயரிலிருந்து வொய்ல்டை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். 2010ல் இவரை கவர்ச்சிகரமான நடிகையாக பீட்டா தேர்வு செய்தது.

6. ஜெஸ்ஸிகா அல்பா

சினிமாவில் மட்டுமல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செக்ஸியாக நடிக்கக்கூடியவர். செக்ஸ் அடையாளமாகவே இவரை குறிப்பிடுகிறார்கள். 13 வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர். ஃபென்டாஸ்ட்டிக் ஃபோர், ஸின் சிட்டி, மோச்செட் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.

5. ஸ்கேர்லெட் ஜான்ஸன்

மிக கவர்ச்சியான, ஹாட்டான நடிகை என்று பல பத்திரிகைகள் இவரை பட்டியலிட்டுள்ளன. 4 முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். தி அவெஞ்சர்ஸ், தி பிரெஸ்டிஜ், விக்கி கிறிஸ்டினா பார்ஸிலோனா, தி அயர்ன் மேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்றைய நிலையில் உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்.

4. மெகான் ஃபாக்ஸ்

2001ல் நடிக்க வந்த இவரை எல்லோருக்கும் தெரியும். ஜென்னிஃபெர்ஸ் பாடி, ட்ரான்ஸ்ஃபார்மெர்ஸ் 2 உள்ளிட்ட படங்கள் புகழ்பெற்றவை. ட்ரான்ஸ்ஃபார்மெர் வெளிவந்த சமயத்தில் உலக ரசிகர்களை திணறடித்தவர்.

3. மிலா குனிஸ்

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை. யூதரான இவர் இன்றுவரை தொடர்ச்சியாக படங்களில் தோன்றுகிறார். இவரால் அமெரிக்கர்கள் தூக்கம் இழந்து தவிப்பதாக பேசப்படுவதுண்டு. பிளாக் ஸ்வான், ஃப்ரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் உள்ளிட்ட படங்கள் இவருக்கு முக்கியமானவை.

2. நடாலி போர்ட்மேன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற நடிகை இவர். பிளாக் ஸ்வான் என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர். வி ஃபார் வெண்டேட்டா, தோர், க்ளோஸர் உள்ளிட்ட படங்கள் புகழ்பெற்றவை. இவருடைய பெயர் இடம்பெறாத பத்திரிகை பட்டியல்களே இல்லை. அழகு, செக்ஸ், இளமை என எல்லா லிஸ்ட்டிலும் இவர் இருப்பார்.

1 மரியான் கோட்டில்லார்ட்

இந்த தலைமுறையின் மிக அழகான நடிகை என்று புகழப்படுபவர். பிரெஞ்சு நடிகை. பிரெஞ்சு படத்தில் நடித்து ஆஸ்கர் வாங்கிய முதல் நடிகை என்ற சரித்திரம் படைத்திருப்பவர். இப்போது தொடர்ச்சியாக ஹாலிவுட் படத்தில் நடித்தாலும், லா வீ என் ரோஸ் என்ற பிரெஞ்சுப் படத்தில் நடித்ததற்கே ஆஸ்கர் விருது கிடைத்தது. இன்ஸெப்ஸன், மிட்நைட் இன் பாரிஸ், பப்ளிக் எனிமி போன்ற படங்கள் புகழ்பெற்றவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here