“நான் பஜாரிதான்” என்கிறார் நடிகை வனிதா!

0
41

பஜாரின்னா போல்டான பொண்ணுனு அர்த்தமா? அப்படின்னா நான் பஜாரிதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரும் இவரைச் சுற்றி சர்ச்சைகள் வலம் வந்தன. பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே ஆந்திரா போலீஸ் நுழைய முயன்றது. இந்நிலையில்தான் நிகழ்ச்சி தொடங்கி கொஞ்ச நாட்களிலேயே வனிதா வெளியேற்றப்பட்டார்.

அவருடைய அனுபவங்களைக் கேட்டபோது, பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பியதாக சொன்னார். ஒரு அனுபவத்துக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன். முதல் ஒரு வாரம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்வதிலும், அவர்களுடைய கேரக்டர்களை புரிந்துகொள்வதிலும் கடந்துவிட்டது. பிறகுதான் சிலருடைய போலித்தனங்களை அறியமுடிந்தது.

நான் மூன்று குழந்தைகளின் தாய். எனவே, மற்றவர்களைப் போல ஜோடி சேர்ந்து சுற்ற முடியாது. அப்படி சுற்றுகிறவர்கள் தங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதுகூட நடிப்புதான். இவ்வளவு சீக்கிரத்தில் காதல் வருமா என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்குள் இருப்பவர்களில் ரேஷ்மாவைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப் போவதை நடிகை ஷகிலாவிடம் சொன்னேன். அவரும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அந்த வகையில், மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் யோசனை கூறினார். வீட்டிற்குள் இருப்பவர்களில் பாத்திமா பாபுவையும், சேரனையும் முன்பே எனக்குத் தெரியும். மற்றவர்களை நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில்தான் அறிந்துகொண்டேன். ரேஷ்மா மிகவும் நேர்மையானவர். எல்லாவற்றிலும் வெளிப்படையான கருத்துக் கொண்டவர்.

என்னை எல்லோரும் கோபக்காரி என்று முத்திரை குத்தியிருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களிலும் எனக்கு பஜாரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நான் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அமைதியாக இருந்திருக்கலாம். மற்றவர்களைப் போல தியானம், அரட்டை என்று இருந்திருக்கலாம். அப்படி இருந்தால் என்னை நடிப்புக்காரி என்றே சொல்லியிருப்பார்கள். எனவே, போலியாக நடிப்பதா? நான் நானாக இருப்பதா என்று கேட்டுக்கொண்டேன். பின்னர்தான், நான் நானாக இருப்பது என்று முடிவெடுத்தேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறவர்கள் ஒரு நல்ல நபரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்றால் ரேஷ்மாவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். தங்களைச் சுற்றிலும் போலித்தனங்களைக் கட்டமைத்து முட்டாளாக்குகிற நபரை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்கள் மதுமிதாவை தேர்ந்தெடுக்கலாம். தங்களுடைய நடவடிக்கைகளால் பார்க்கிறவர்களை சைக்கோவாக மாற்றும் நபரை பிடிக்கும் என்றால் அபிராமியை தேர்ந்தெடுக்கலாம் என்று போட்டுத் தாக்குகிறார் வனிதா.Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here