டோன்ட் கேர் டெலிவிஷன் நடிகை!

0
27

அமெரிக்காவில் டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவில் நடித்து பாப்புலர் ஆனவர் க்ளோ கார்தாஷியன். இவரும் இவருடைய குடும்பத்தினரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி ரொம்பப் பாப்புலர்.

33 வயதாகும் க்ளோ தனது ஷோவை பாப்புலர் செய்வதற்காக பல தந்திரங்களை கையாள்வார். இவருடைய விதவிதமான போஸ்கள் அமெரிக்காவில் கிறக்கத்தை ஏற்படுத்தும். வீடுகளில் குடும்பத்தினர் காணும் நிகழ்ச்சிகளில் நடிப்பவர் என்றாலும், செக்ஸியான இவருடைய படங்கள் சமீப காலமாக வரவில்லை. 

அவர் கர்ப்பமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், தனது உடல் எடை அதிகரிப்பது குறித்து கவலை இல்லை என்று கூறியிருக்கிறார்.

எனது எடைக்கேற்ற உடைகளை அணிவேன். எனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பேன் என்று இயல்பாக கூறுகிறார் க்ளோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here