டைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்!

0
32

டைட்டானிக் நாயகி கேத்தே வின்ஸ்லெட் 20 ஆண்டுகளுக்குப் பிறகு டைட்டானிக் இயக்குனரின் படத்தில் நடிக்கத் தயாராகிறார்.

அவதார் படத்தின் தொடர்ச்சியாக டேவிட் கேமரூன் தயாரிக்கும் படத்தில் கேத்தே வின்ஸ்லெட் நடிக்கப் போகிறார். டைட்டானிக்கிற்கு பிறகு 20 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம். அவதார் படத்தின் தொடர்ச்சியாக நான்கு பாகங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் ரோனல் என்ற கதாபாத்திரத்தை கேத்தேவுக்காக உருவாக்கி இருக்கிறோம். அந்த பாத்திரத்திற்கு கேத்தே உயிர் கொடுக்கும் நாளுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் டேவிட்.

இந்த படத்தின் தயாரிப்பிலும் கேத்தேவுக்கு பங்கிருக்கும் என்றும் செய்தி இருக்கிறது. இதனிடையே நடிகர் லியனார்டோ டிகாப்ரியோவுடன் காதல் என்ற செய்தியை கேத்தே வின்ஸ்லெட் மறுத்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்வோம். இப்போதும் அது தொடர்கிறது. மற்றபடி எங்களுக்குள் வேறு ஒன்றுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here