இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்!

0
43

இதயம் தொடர்பான நோய்கள்தான் மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது. 25 சதவீதம் மரணம் இதயநோய்களால்தான் நிகழ்வதாகவும், இத்தகைய மரணங்களில் பெரும்பாலானவை ஆண்களுக்கே நிகழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதயநோயை முற்றாக தடுக்க முடியாது என்றாலும், இதயநோயை தடுக்க இதயத்திற்கு ஆரோக்கியமான 15 வகை உணவுகளை உட்கொள்வதால் எதிர்காலத்தில் இதயநோய் வராமல் தடுக்க முடியும் என்று பட்டியலிட்டுள்ளனர்.

1.ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டருக்கு அவசியமில்லை என்பார்கள். ஆப்பிளில் சத்தான நோய் எதிர்ப்பு அம்சங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்திருப்பதாகவும், அவரை ரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது பலவகை ஆப்பிள்கள் வருகின்றன. எல்லா ஆப்பிள்களுமே அவற்றுக்கான சத்துகளை கொண்டிருப்பதால் எதைச் சாப்பிடுவது என்று யோசிக்கவே வேண்டியதில்லை.

2.சியா விதைகள்

சிறிய விதைகளாக இருந்தாலும் சியா விதைகளில் உள்ள சத்துகள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பலன் தரக்கூடியது. இந்த விதைகளில் அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியும் ஒமேகா-3எஸ் என்ற சத்தும் இருக்கின்றன. இவை இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைத்து, இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. பொடி செய்து நீரில் கலந்து உபயோகித்தாலும், இடித்து உருண்டையாக்கி சாப்பிட்டாலும் கிடைக்கிற பலன் கிடைத்துவிடும்.

3.மஞ்சள்

மஞ்சளில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன. இதன் காரணமாக சத்துணவு மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான உணவுத் தயாரிப்புகளில் மஞ்சளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் என்று வரும்போது இதன் மகத்துவம் மிக அதிகம். மஞ்சளில் கர்கியூமின் என்ற சத்து அதிகமாக இருக்கிறது. இதயம் பெரிதாவதற்கு காரணமான உயிரிரசாயன விளைவுகளை இது தடுக்கிறது. அதிக ரத்த அழுத்தத்தின்போது ரத்தக்குழாய்கள் வெடிக்கும் ஆபத்தை குறைக்கிறது.

4.சல்மான அல்லது காலா மீன்

சல்மான் அல்லது காலா மீனில் ஒமேகா-3 என்ற கொழுப்பு ஆசிட்கள் நிறைய இருக்கின்றன. ரத்த சுற்றோட்ட உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை, ட்ரைக்ளைசெரைட் எனப்படும் கொழுப்பெண்ணை அளவை குறைத்து தடுக்க இந்த மீன் உதவுகிறது. ரத்தக்குழாய்களை விரிவுபடுத்தி, அவற்றில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

5 பீட்ரூட்

பீட்ரூட்டில் ஃபோலேட், பீடேய்ன் ஆகிய இரண்டு சத்துகள் அதிகமாக இருக்கின்றன. நமது உடலில் ஹோமோசைஸ்டெய்ன் என்ற அமினோ அமிலத்தின் அளவை குறைக்க இது உதவுகிறது. இந்த அமிலம் அதிகரித்தால் இதயத்தின் சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டு சேதமடையும்.

6 ப்ளூபெர்ரி அல்லது அவுரிநெல்லி

இது ஒரு அருமையான பழம். முதுமையை தடுக்கும் சத்துகள் மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக கொண்டவை. ரத்தக்குழாய்களின் சுவரை பலப்படுத்துகிறது. இதயநோய்களை மட்டுமின்றி, புற்றுநோய்க்கு காரணமான கிருமிகளையும் ஒழிக்கிறது.

7 மாதுளை

தினமும் கால் லிட்டர் மாதுளம் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயின் உள் சுவரில் விஷத்தன்மை தகடுபோல ஒட்டுவது தடுக்கப்படும். தவிர, மாதுளம் ஜூஸில் ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது.

8.பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு ஆரோக்கியமான சுவையான உணவு. இதில் உள்ள தாவர ஸ்டெரோல் மோசமான கொழுப்பு அளவை குறைத்து,  குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டினை இல்லாமல் செய்கிறது. டோரோண்டோ பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்வில் பாதாம் பருப்பு கலந்த உணவைச் சாப்பிடுவதால் இதயநோய் தாக்கும் ஆபத்து 28 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.

9 பயறு வகைகள்

பருப்பு கலந்த உணவை உட்கொள்வதால் இதயநோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கலாம் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பயறு வகைகளை தனியாக சாப்பிடலாம். புரதம், மாங்னீசியம், பொட்டாசியம் சத்துகள் பயறுகளில் அதிகமாக இருக்கின்றன. ரத்தக்குழாய்களில் விஷத்தன்மை ஒட்டுவதை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

10 மத்தி மீன்

மத்தி மீனை உணவாகக் கொள்வதால் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நமது உடலில் உள்ள ட்ரைக்ளைசெரைட் அளவை குறைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. உடலில் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. மத்தி மீன் சாப்பிடும் பெண்களுக்கு இதயநோய் தாக்குதல் வெகுவாக தடுக்கப்படுவதாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

11 கருப்பு சாக்லெட்

பனாமா நாட்டின் கடலோரம் வசிக்கும் குணா இந்தியர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் பூர்வகுடிகளான இந்த மக்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாவதே இல்லை என்பது தெரியவந்தது. முதலில் இது அவர்களுடைய பரம்பரை குணம் என்று கருதப்பட்டது. ஆனால், கோகோ பானம் அருந்துவதால் அவர்களுடைய ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக தெரியவந்தது. டார்க் சாக்லெட்டில் இந்த கோகோ அதிக அளவில் கலக்கப்படுகிறது. இது ரத்தக்குழாய்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது என்கிறார்கள்.

12 சிவப்பு ஒயின்

சிவப்பு ஒயினை சாப்பிடுவதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அதிகரிக்கிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வாக வைத்து ரத்த அடைப்பை தடுக்கிறது. ஒரு கிளாஸ் ஓயின் ஆஸ்பிரினைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. மாரடைப்பை தடுக்கிறது என்கிறார்கள்.

13 வெள்ளைப்பூண்டு

நமது ரத்தக்குழாய்களில் தகடுபோல சேரும் விஷத்தன்மையை வெள்ளைப்பூண்டு குறைக்கிறது. இதன்காரணமாக ரத்தக்குழாய் தூய்மையடைகிறது. ரத்தக்குழாய் சுருங்குவதற்கு காரணமான ஆங்கிலோடென்ஸின் எனப்படும் என்ஸைம் அளவை குறைக்க உதவுகிறது. மாத்திரை வடிவில் வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிடுகிறவர்களின் ரத்தக்குழாய் அடைப்புகள் 50 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

14 காலே அல்லது பரட்டைக்கீரை

கீரைகளே பொதுவாக இதயத்திற்கு நல்லதுதான். அதிலும் காலே அல்லது பரட்டைக்கீரை ரொம்பவும் நல்லது. ரத்தக்குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்தக் கீரை பயன்படுகிறது. இதயநோய் தாக்குதலை வெகுவாக குறைக்கிறது. இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்திருக்கிறது. தினமும் சாப்பிடக்கூடிய அற்புதமான உணவு இது.

15 ஆரஞ்சு

பல நோய்களுக்கு ஒரே மருந்தைத் தேடுகிறவரா நீங்கள். உங்கள் தேடலை நிறைவு செய்யும் தகுதி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில் பெக்டின் என்ற நார்ப்பொருள் நிரம்பியிருக்கிறது. இது, உணவில் உள்ள கொழுப்பை உறிஞ்சிவிடுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், சோடியம் அளவை ஈடுசெய்து ரத்த அழுத்தம் அதிகமாவதை தடுக்கிறது. ஆரஞ்சுப் பழம் நமது உடலில் உள்ள புரதத்தின் அளவை சமப்படுத்தி இதயநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here