அலங்கார பட்ஜெட்டில் முழுக்க முழுக்க பேன்கள்! தயாநிதிமாறன் கடும் தாக்கு!

இரண்டுமுறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் என்றாலும், அவருக்குள் இருந்த மிகச்சிறந்த பேச்சாளரை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது. இதற்கு முன்னும் அவர் சரவெடியாக வெடித்திருக்கிறார் என்றாலும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அவருடைய அனாயசமான வார்த்தைப் பிரயோகங்கள் மக்களவையை அதிரவைத்தது. நிதியமைச்சரையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் போட்டுத் தாக்கிய அவருடைய உரை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.  தனது உரையின் தொடக்கத்திலேயே கலைஞர் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழியைச் சொல்லி அவையை கவர்ந்தவர் உரை முடியும்வரை தனது அட்டாக்கை நிறுத்தவேயில்லை… “மறைந்த...
Read More

பொள்ளாச்சிக்காரனுக பொல்லாதவனுகளோ? புகார் கொடுத்தவரையே மிரட்டி எழுதிவாங்கிய போலிஸ்!

பொள்ளாச்சி தாலுகா கிணத்துக்கடவு காட்டம்பட்டி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் போலிஸில் புகார் கொடுத்தும், சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத போலிஸ், மாணவிகளின் பெற்றோரை மிரட்டி 20 ரூபாய் பத்திரத்தில் ஆசிரியர் நல்லவர் என்று எழுதி வாங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, சரியாக விசாரிக்காமல் போராட்டம் நடத்தியதாகவும், எதிர்காலத்தில் இதுபோல புகார் கொடுக்க மாட்டேன் என்றும், இதுவிஷயமாக நீதிமன்றம் செல்ல...
Read More

காஷ்மீர் முழுவதையும் சிறைச்சாலையாக ஏன் அறிவிக்கக் கூடாது? சிபிஎம் தலைவர் யோசனை!

காஷ்மீருடன் வெளியுலகத் தொடர்பை துண்டித்து ஐந்து மாதங்கள் முற்றாக முடிந்துவிட்டன. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் மிரட்டப்பட்டு, வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியுலகின் பார்வைக்காக சில நேரம் மட்டுமே மக்கள் வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே சுற்றுலா பகுதிகளில் நடமாட முடிகிறது. அதாவது வழக்கத்திற்கு மாறான காட்சிகளை காட்டி, இதுதான் காஷ்மீரின் வழக்கமான நடவடிக்கைகள் என்று நிரூபிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. லட்சக்கணக்கான...
Read More

ரம்யாவுக்கு எப்போ தடை நீங்கும்?

அநீதிக்கு எதிராக பேசும்போது ஒரு பகுதியிலிருந்து எதிர்ப்பு வருவது இயற்கைதானே என்கிறார் ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான ரம்யாவுக்கு சமீபகாலமாக மலையாளத்தில் வாய்ப்புகளே இல்லை. நடிகை பாவனா மீது ஏவப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் ரம்யாவும் முக்கியமானவர். மீ டூ விவகாரத்தில் மலையாள சினிமா உலகில் பல நடிகர்களும், இயக்குனர்களும் சிக்கினார்கள். மலையாள சினிமா உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இதையடுத்து, வர்கீஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த...
Read More

பாஜகவின் சோலி முடிஞ்சுது!

சும்மா சொல்லக்கூடாது. டெல்லி மக்கள் பாஜகவை இந்த முறையும் வச்சு செஞ்சிருக்காங்க. வளர்ச்சியின் நாயகன் என்றும் அசைக்க முடியாத பிரதமர் என்றும் தினமும் பாஜகவினர் கூவிவந்த நிலையில், 6 ஆண்டுகள் ஆட்சிசெய்த தலைநகரத்து மக்கள் மோடியை பொடிப்பொடியாக சிதைத்திருக்கிறார்கள். அத்துடன் அற்புதங்களை நிகழ்த்துபவராக அடிக்கடி வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவையும் நோகடித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி பலத்த அடிவாங்கியிருக்கிறது. இனி தமிழ்நாட்டைப் போல டெல்லியிலும் காங்கிரஸ் எழுந்திருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. மூன்றாவது முறையாக முதல்வராகப்...
Read More
1 2 3 7