சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு! – அமைச்சர் தகவல்!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மின் கட்டணங்களை செலுத்த ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். பலர் வங்கி கடன் செலுத்த கால அவகாசம் ஏற்படுத்தி தர வேண்டு மென கேட்டு வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு சில கால அவகாசங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில்...
Read More

ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் ! – விஜய் மல்லையா

இந்தியாவில் முன்னணி தொழில் அதிபராக இருந்தவர் மல்லையா. விஜய் மல்லையா என்றாலே கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்பதாகவே இருந்தது. பின்னர் கிங் பிஷர் விமான போக்குவரத்தில் பெரிய நஷ்ட அடி விழ நொறுங்கிப்போனார். அடுத்ததாக வந்தது பிரச்ச்னை வங்கிகளில் வங்கிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை திரும்ப செலுத்தாமல் நாட்டை விடு ஓடி இன்று லண்டனின் தலைமறைவாக வாழ்கிறார் விஜய் மல்லையா....
Read More

கொரோனா வார்ட்டாகும் கலைஞர் அரங்கம்

சென்னை: இந்தியா உட்பட உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். 1,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 86 பேர்  குணமடைந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும்  நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை...
Read More

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு...
Read More

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சீனாவை பார்த்து மற்ற நாடுகள் உஷாராவதற்கு முன்பே வேகவேகமாக உலக நாடுகள் அனைத்திலும் வேகவேகமாக பரவியது கொரோனா. ஆரம்பத்தில் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்திருந்தாலும் அதை தாண்டி இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகமான உயிர்பலிகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் மூன்று மாத கால போராட்டத்திற்கு பிறகு சீனாவில் கொரோனா பரவுதல் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம்பெற்று திரும்பி வரும் நிலையில்,...
Read More

உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32, 205 ஆக உயர்வு !

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 752241 பேர் பாதிப்பட்டுள்ளனர். 36,207 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை சுமார் 158688 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 2757 ஆக உயர்வு. இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11500 ஆக அதிகரித்துள்ளது.

பி.எஸ்.என்.எல், ஏர்டெல் அதிரடி சலுகை அறிவிப்பு…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் உள்ள அனைவரும் வேலையின்றி வருமானமின்றி வீட்டில் கடந்த ஒரு வாரமாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு திடீர் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது இதன்படி ஏப்ரல் 14 வரை பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் அவர்களது சேவை துண்டிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பிஎஸ்என்எல் இந்த சலுகையை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில்...
Read More

சென்னையில் கொரோனா ரெட் அலர்ட்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னையை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு...
Read More

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காவிட்டால் உதயநிதிக்கு போன் பண்ணுங்க… பொருட்கள் கிடைக்கும்!

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரமாக முன்னேற்பாடு ஏதும் செய்யாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் போலீஸ் தொல்லை அதிகரித்துள்ள நிலையிலும், மறுபக்கம் கொரோனா நோய் தொற்றுக்கு உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மக்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்....
Read More

மாதா அமிர்தானந்த மயி ஒளித்து வைத்த வெளிநாட்டவர்கள் கைது!

இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 68 பேர் அம்மா என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது ரகசிய இடத்தில் மறைத்துவைக்கப்பட்ட இத்தாலி, சைனா போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 68 வெளிநாட்டினரை, கண்டுபிடித்தனர், உடனே அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று அவர்களை…. தனிமைப்படுத்தி, கண்காணித்துவருகின்றனர்.!. இன்னும், அவர்களோடு, தொடர்பிலிருந்தவர்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்! இது அமிர்தானந்தமயி மட்டுமல்ல, மற்ற சாமியார்களின் மடங்களை,...
Read More